உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் கோவிலுக்கு ரூ.42 லட்சத்தில் தேர்!

மூலநாதர் கோவிலுக்கு ரூ.42 லட்சத்தில் தேர்!

பாகூர்: பழமை வாய்ந்த, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலுக்கு,  புதிய தேர் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. பாகூரில், முதலாம் பராந்தகச்சோழ  மன்னரால் கட்டப்பட்ட,  1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், தற்போது,  தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. சிறப்புவாய்ந்த இந்த கோவிலுக்கு, கடந்த 2005ம் ஆண்டு புதிய தேர் செய்ய முடிவு செய் யப்பட்டது. ஆனால் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போட்டப்பட்டது. இந்நிலையில், புதியதாக தேர் செய்வதற்கான கமிட்டி,  கடந்த ஜூன்  மாதம்  அமைக்கப்பட்டு, 42 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 27 அடி உயரத்தில், புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது, அதற்கான  பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. பெரம்பலுார்  மாவட்டத்தை சேர்ந்த ஸ்தபதி மதிவாணன் தலைமையில், 10க்கும் மேற்பட்ட சிற்பிகள்,  தேர் செய்யும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக, தேரினை அலங்கரிக்கக் கூடிய மரச்சிற்பங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.  இலுப்பை மர கட்டையில், சிவன், பார்வதி, விஷ்னு, துவரபாலகர், வினாயகர், சரஸ்வதி, லட்சுமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் மற்றும் நடன  மங்கையர்களின் சிற்பங்களை செதுக்கும்  பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !