திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ. 15 லட்சம்!
ADDED :4048 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள 35 நிரந்தர உண்டியல்கள் துணை கமிஷனர் பச்சையப்பன் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டன. இவற்றிலிருந்து 15 லட்சத்து 51 ஆயிரத்து 725 ரூபாய், தங்கம் 112 கிராம், வெள்ளி 919 கிராம் வருமானமாக கிடைத்தது. கோயில் பணியாளர்கள், ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி மேல்நிலைப்பள்ளி மாணவியர், பாடசாலை மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.