உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி யாகம்

கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி யாகம்

நங்கவள்ளி : தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், சனிப்பெயர்ச்சி யாகம் நேற்று நடந்தது. சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு, பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, கண்ட சனி இவைகளின் பாதிப்புகளில் இருந்து மீளவும், 12 ராசி அன்பர்களும் பயனடையும் வகையில், தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நேற்று காலை நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சனி பகவானை ஸ்வாமி தரிசனம் செய்தனர். சனி பகவானுக்கு, 108 சங்கு அபிஷேகம் மற்றும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை, ஸ்ரீ தேவகுரு வழிபாட்டு குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !