ஒரத்தூரில் கல்லறை திருநாள் விழா
ADDED :3994 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஒரத்தூரில் கல்லறை திருநாள் விழா அனுசரிக்கப்பட்டது ஒரத்தூரில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை அலங்கரித்து மலர் தூவி மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். ஆலய ஆயர் தியாகராஜன் சபை மக்களுக்கு இறையாசி வழங்கினார். நிகழ்ச்சியில் சபை ஊழியர்கள் சாமுவேல், துரைசாமி,சேகர்,ஜான்பீட்டர் ,சாமி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை வாலிபர் சங்கத்தினர் முன்னின்று செய்திருந்தனர்.