உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோடசலிங்க ஸ்வாமிகளுக்கு நவ., 6ல் அன்னாபிஷேகம்

சோடசலிங்க ஸ்வாமிகளுக்கு நவ., 6ல் அன்னாபிஷேகம்

கும்பகோணம்: ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளக்கரையில் எழுந்தருளியுள்ள, 16 சோடசலிங்க ஸ்வாமிகளுக்கு அன்னாபிஷேகம் நவம்பர், 6ம் தேதி நடைபெறவுள்ளது. கும்பகோணம் மகாமக குளத்தின் நடுவில் வாயு, கங்கா, பிரண்மா, யமுனை, குபேர, கோதாவரி, ஈசானியா, நர்மதை, சரஸ்வதி, இந்திர, அகண்னி, காவேரி, யம, குமர், ருதி, பயோஹினி, தேவ, வருண, சரயு, கன்யா என, 20 தீர்த்த கிணறுகள் உள்ளன. மகாமக குளத்தை சுற்றிலும், 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில், 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு மண்ட பத்திலும் பிரம்மதீர்த் தேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ் வரர், விருஷ பேஸ்வரர், புரணேஸ் வரர், கோ ணேஷ்வரர், பக்தி கேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ் தீஸ்வரர், வயாச கேஸ்வரர், உமாபா கேஸ்வரர், ருதீஸ்வரர், பிரம் மேஸ்வரர், கங்கா தேஸ்வரர், முக்ததீர்த் தேஸ்வரர், சேஷஸ்தரபா லேஸ்வரர் என, 16 வகையான சிவலிங்கங்கள் அமை ந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க ஸ்வாமிகள் என்கின்றனர். சிறப்பு பெற்ற சோடஷ மாகலிங்க ஸ்வாமிகளுக்கு, ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, நவம்பர், 6ம் தேதி காலை, 9.30 மணிக்கு எண்ணெய், அரிசிபொடி, மஞ்சள்பொடி, திரவியப் பொடி, பால், இளர், தேன், பஞ்சாமிர்தம் என பலவித பொருட்களால்" சிறப்பு அபிஷேகம் நடை பெறவுள்ளது.

நிறைவாக அன்னா பிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, அலங் காரங்கள் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அபிமுகேஸ்வரர் ஆலய கிருத்திகை வழிபாட்டு குழுவினர் செய்கின்றனர். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவில், வியாழசோமேஸ்வரன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கௌதமேஸ்வரர் கோவில், கம்பட்ட விசுவ நாதர் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில், பட்டீஸ் வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் நவம்பர், 6ம் தேதி, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !