உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் பவுர்ணமி பூஜை!

ராமநாதபுரம் பவுர்ணமி பூஜை!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் உள்ள தாயுமான சுவாமிகள் தவம் செய்து சித்தி பெற்ற இடத்தில் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புளியமரம் உள்ளது. அதன் அடியில் தவம் செய்த நிலையில் மூலவரின் சிலை உள்ளது. இங்கு நாளை காலை 9:00 மணியளவில் பவுர்ணமி பூஜை நடக்கிறது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். பின்னர், தாயுமானவரின் பராபரக்கண்ணி, திருவாசம், சிவநாம அர்ச்சனைகள் ஆன்மிக சமய சொற்பொழிவுகள், அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராஜன், கொடிக்குளம் சத்தியமூர்த்தி செய்துள்ளனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !