கோவில் குளங்கள் அதிகாரிகள் ஆய்வு!
பாரிமுனை: கோவில் குளங்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.தினமலர் செய்தி எதிரொலியாக, சென்னை யில் உள்ள இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில் குளங்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து, இந்து சமய அறநிலைய துறை உயரதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பாரிமுனையில் உள்ள சென்னகேசவப்பெருமாள் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், பைராகி மடம் கோயில், மண்ணடி புதுத் தெரு செங்கழுநீர் விநாய கர் கோவில், மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அறநிலையத்துறைக்குட்பட்ட 57 கோவில் குளங்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.மேலும், கோவிலில் செய்யப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு முறைகள், கோயில் குளங்களின் அளவு உள்ளிட்டவற்றை அதிகாரி கள் ஆராய்ந்து, புகைப்படங்களையும் எடுத்து கொண்டனர்.
இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது வழக்கமாக
மேற்கொள்ளப்படும் ஆய்வு தான். சிறப்பாக எதுவும் இல்லை. ஆய்வு முழுவதும் முடிந்தபின், தகவல்கள் தெரிவிக்கப்படும், என்றார்.