பாலமதி ராம கிருஷ்ண சாதுவுக்கு ஆதின பட்டம்!
ADDED :3995 days ago
வேலூர் : பாலமதி ராம கிருஷ்ண சாதுவுக்கு, ஆதின பட்டம் வழங்கப்பட்டது.
வேலூர், பாலமதி குழந்தை வேலாயுதபாணி சுவாமி கோவிலில், ராம கிருஷ்ண சாதுவுக்கு, ஆதின மடாதிபதி பட்டம் மற்றும் பிரத தண்டம் வழங்கும் விழா பாலமதியில் நேற்று நடந்தது. ராம கிருஷ்ண சாது தலைமை வகித்தார். தஞ்சாவூர் சக்கர பாணி சுவாமிகள் ஆதின மடாதிபதி பட்டம் வழங்கி பிரத தண்டத்தை வழங்கினார்.ரத்தினகிரி பால முருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர ஸ்வாமிகள், திருவலம் சாந்தா ஸ்வாமிகள், வஞ்சூர் சிவ பால குரு ஸ்வாமிகள், செங்கா நந்தம் சசி குமார் ஸ்வாமிகள், வேலூர் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் இலக்குமதி, தொழிலதிபர் பன்னீர் செல்வம், கோவில் நிர்வாகி ஏழுமலை கலந்து கொண்டனர்.