உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைக்காட்டூர் சித்தர் ஜெயந்தி விழா; 18 வகை மூலிகை பொருட்களால் திருமஞ்சனம்

இடைக்காட்டூர் சித்தர் ஜெயந்தி விழா; 18 வகை மூலிகை பொருட்களால் திருமஞ்சனம்

மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று மாலை திருவிளக்கு பூஜையும் அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கோ,பரி,ஆடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக ,ஆராதனைகளையும், அன்னதானமும் நடந்தது. விழாவில் இடைக்காட்டூர்,சிவகங்கை, மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !