உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கடந்த 5 மாதங்களில் ரூ.1.09 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்., மாதம் உண்டியல் திறக்கப்பட்ட நிலையில்,  மீண்டும் 5 மாதங்களுக்கு பிறகு காணிக்கை பணம் எண்ணும் பணி இன்று நடந்தது. அறநிலையத்துறை சரக ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில், செயல் அலுவலர் பாக்கியராஜ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதிலிருந்த பணம் எடுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 1 லட்சத்து 9 ஆயிரத்து 567 ரூபாய் காணிக்கை பணம் இருந்தது. தொடர்ந்து, கோவில் வங்கி கணக்கில் காணிக்கை பணம் செலுத்தப்பட்டது. ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !