சிருங்கேரியில் ஸ்ரீ பாரதி தீர்த்த மகாஸ்வாமிஜியின் 36வது ஆண்டு பட்டாபிஷேக தின விழா
சிருங்கேரி; சிருங்கேரியில் தட்சிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாஸ்வாமிஜியின் 36வது ஆண்டு பட்டாபிஷேக தின விழா கொண்டாடப்பட்டது. மகாஸ்வாமிஜி 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ம் தேதி சுக்ல சம்வத்சரத்தின் ஆஸ்வயுஜ கிருஷ்ண பஞ்சமி அன்று வியாக்யான சிம்ஹாசனம் செய்தார். ஸ்ரீ சன்னிதானத்தின் திவ்ய பிரசன்னத்தில் லோக கல்யாணத்திற்கான மகாசங்கல்பத்துடன் ஸ்ரீ சாரதாம்பா சந்நிதியில் கடந்த அக்டோபர் 4ம் தேதி தொடங்கிய கோடி கும்குமார்ச்சனை அக்டோபர் 11ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 75 ரித்விக்குகள் கும்குமார்ச்சனை செய்து, லலிதா சஹஸ்ரநாமாவலியை தினமும் 20 முறை உச்சரித்து, 8 நாட்களில் ஒரு கோடி பாராயணங்களை செய்து முடித்தனர். சிருங்கேரியில் லோககல்யாணத்திற்காக சஹஸ்ர நரிகேள கணபதி ஹோமமும், ஸ்ரீ லலிதா ஹோமமும் செய்யப்பட்டு, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமிஜி அவர்களின் திவ்ய சந்நிதியில் பூர்ணாஹுதி அக்., 11ம் தேதி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.