தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம்!
ADDED :3992 days ago
தஞ்சாவூர்: ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, இன்று, தஞ்சை பிரதீஸ்வரர் ஸ்வாமிக்கு, 30 மூட்டை அரிசியில், அன்னாபிஷேகம் நடக்கிறது. ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடக்கும். இன்று காலை, 12.30 மணிக்கு, பிரகதீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை நடக்கிறது. இதை தொடர்ந்து, 30 மூட்டை அரிசியை கொண்டு அன்னம் தயார் செய்யப்பட்டு, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின், ஒரு டன் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இதை தொடர்ந்து மாலை, 5 மணிக்கு சிறப்பு ஆராதனை நடக்கிறது.