உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூக்குமுட்ட ’குடி’ப்போரோடு மல்லுக்கட்டும் மும்மத கடவுள்கள்!

மூக்குமுட்ட ’குடி’ப்போரோடு மல்லுக்கட்டும் மும்மத கடவுள்கள்!

’இங்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்தும் இறைவனுக்கே; இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமும் உள்ளார்; அசையா பொருட்களிலும் உள்ளார்”இதுபோன்ற வாசகங்கள், இப்போது சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவர்களில் எழுதப்பட்டு வருகின்றன.

கடவுள் ஏன்?

குறிப்பாக, ’டாஸ்மாக்’ அருகேயுள்ள தனியார் மற்றும் பொது சுவர்களில் இதுபோன்ற வாசகங்கள், பல பரிமாணங்களில் எழுதப்பட்டுள்ளன.அத்துடன் மும்மத கடவுள்களின் படங்களும், பெரிய அளவில் ஒட்டப்பட்டுள்ளன. ’டாஸ்மாக்’கில் வயிறு முட்ட மது அருந்தும் ’குடி’மக்கள் அருகேயுள்ள சுவர்களில் தான், ’பாரத்தை’ இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுப்புறமே துர்நாற்றத்தில் தவிப்பதோடு, அந்த பகுதியில் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கவே, சுவர்களில் கடவுளின் படங்கள் வைப்பதாக சம்பந்தப்பட்டோர் தெரிவிக்கின்றனர். தண்­டை­யார்­பேட்டை இளைய முதலி தெரு இதுகுறித்து, தண்டையார்பேட்டையை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கூறியதாவது:’குப்பை கொட்ட வேண்டாம், சிறுநீர் கழிக்க வேண்டாம்’ என, எவ்வளவு தான் எழுதி வைத்தாலும், அதன் மீதே சிறுநீர்கழிக்கின்றனர். மது அருந்தி விட்டு சிறுநீர் கழித்து விட்டு சென்றால் அவ்வளவுதான், மது அருந்தாதோரே மயங்கும் நிலைக்கு ஆளாகி துர்நாற்றம் பரவுகிறது. நிலையான மனிதர்களையே கட்டுப்படுத்த முடியாத நிலையில், மது போதையில் உள்ளவர்களிடம் மல்லுக்கட்டவே முடியவில்லை.மாநகராட்சியாலும் தினமும் துப்புரவு பணி செய்ய முடியாது. எனவே தான், மும்மத கடவுள்களின் படங்களை வைக்கத் துவங்கினோம்.

தண்டிக்க வேண்டும்: ’டாஸ்மாக்’ கடைக்கு அருகில், நடமாடும் கழிப்பறைகளை மாநகராட்சி அமைக்க வேண்டும்.பொது இடங்களில் புகைபிடிப்போரை தண்டிப்பது போல், சிறுநீர் கழிப்போரை யும் தண்டித்தால் சுகாதாரம் காக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர். நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !