மயிலம் பகுதி கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!
ADDED :3991 days ago
மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. மயிலம் அடுத்த ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் அன்னாபி÷ ஷகத்ததை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள மூலவர், திரிபுரசுந்தரி, சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடக்கிறது. அன்னத்தால் அபிஷேகம் செய்கின்றனர். இரவு 7 மணிக்கு ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு அன்னதானம் செய்கின்றனர். பாதிராபுலியூர், கொல்லியங்குணம், ரெட்டணை, சேவூர் ஆகிய கிராமங்களிலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அன்னாபிஷேகம் நடக்கிறது.