பெரியகுளத்தில் மாமுனாச்சியம்மன் கோயில் திருவிழா!
ADDED :3991 days ago
சாயல்குடி : சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமுனாச்சியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி 10 நாள் விரதமிருந்த இந்துக்களும், முஸ்லிம்களும் நிறைவு நாளில், அதிகாலை 5:00 மணிக்கு கோயிலில் திரண்டனர். ஆண்கள் தீக்குழி இறங்கினர். பெண்கள் தலையில் தீயை வாரிவிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மாமுனாச்சியம்மன் இறந்ததை நினைவூட்டும் விதமாக சப்ரத்தில் பிறைகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.