காஞ்சிபுரம் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிவன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி, அன்றும் சில கோவில்களில் அதற்கு முதல் நாளும் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். இதேபோல், நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உற்சவருக்கும், கச்சேபேஸ்வர், திருமேற்றளீஸ்வரர், ஓதஉருகீஸ்வரர், சித்தீஸ்வரர், குமரகோட்டம் சேனாதிபதி ஈஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். அன்னாபிஷேகம் முடிந்த பின்னர் அந்த சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் பட்டது. காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளக்கரை சுற்றியுள்ள காசி விஸ்வநாதர், கங்காதீஸ்வரர், கிரண்யேஸ்வரர், மல்லிகா அர்ச்சுனேஸ்வரர், ராமேஸ்வரர், தீத்தேஸ்வரர், லட்சுமனேஸ்வரர், அனுமந்தீஸ்வரர், லிங்கேஸ்வரர், தவளேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், திருக்காலிமேடு சத்யநாத சுவாமி உடனான பிரம்மராம்பிகை ஆகிய கோவில்களில் இன்று மாலை 6:00 மணியளவில் அன்னாபிஷேகம் நடக்கிறது.