மொகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க பூக்குழி!
ADDED :3990 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வாராப்பூரில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு இந்து -முஸ்லிம் மத நல்லிணக்க பூக்குழி நடந்தது.இங்கு பாத்திமா நாச்சியார், அசனார் ,உசனார் கோயில் உள்ளது.இந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்தனர்.பூக்குழிக்கு தேவையான விறகு அனைத்து குடும்பங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் கோயில் முன் அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கினர்.பாத்திமா நாச்சியார்,அசனார்- உசனார் கை விரல் அடையாள சிலைகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலம் வந்தது.