தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3991 days ago
ஆனைமலை : ஆனைமலை அருகே சேத்துமடையில் அமைந்துள்ள விநாயகர், ராஜமுருகன், தாய் மூகாம்பிகை அம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம், முதற்கால யாக பூஜையுடன் தொடங்கி வேள்வி விநாயகர் பூஜை, புன்யஹவாசனம், கணபதி ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை வாஸ்து சாந்தி, பூமி பூஜை, கும்ப ஸ்தாபனம், கலச பூஜை, யாகசாலை பிரவேசம், பூர்ணா ஹூதி, ஆகியவை நடந்தது.காலை 8.45 மணிக்கு புனித நீர் கொண்டு வந்து கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம், தீபாராதனை ஆகியன நடந்தன. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சியில் ஆனைமலையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.