திருவெண்ணெய்நல்லூர் பகுதி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா!
ADDED :3987 days ago
திருவெண்ணெய்: திருவெண்ணெய்நல்லூர் பகுதி சிவன் கோவிலில் நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பி கை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர் லிங்கத்திற்கு 50 கிலோ சாதம் சாற்றப்பட்டு, இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு சண்டிகேஸ் வரரு க்கு, சிவனுக்கு படைத்த அன்னம் குளத்தில் கரைக்கப்பட்டது. இரவு 8:30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 9:00 மணிக்கு அர்த்தஜாமபூஜை நடந் தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், உற்சவதாரர்கள் ரவி, மணிகண்டன், குருக்கள் ரவி செய்தனர். ஆலங்குப்பம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இரவு 7:00 மணிக்கு அன் னாபிஷேகம் நடந்தது.