உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லலிதா செல்வாம்பிகை கோவிலில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம்!

லலிதா செல்வாம்பிகை கோவிலில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம்!

செஞ்சி: லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்திருந்தனர். செஞ்சி தா லுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். 800 கிலோ  25 வகை காய்கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. அறங்காவலர் குழு தலைவர்  கன்னியப்பன் உட்பட பலர்  கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வரன் சிவன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !