பசுபதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்!
ADDED :3984 days ago
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு பசுபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு பசுபதீஸ்வர சுவாமிக்கு பழங்கள், காய்கறிகள், உணவு தானியங்கள் ஆகிய அன்னங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.