சப்தகன்னி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3985 days ago
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லூரில் சப்தகன்னி மற்றும் பரிவார தெய்வங்களான முத்துமாரியம்மன், வீரபத்திர சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 6ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கலச ஆகரு ஷணம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை நாடிசந்தானம், கங்கனதாரனம், மகா அபிஷேகம், இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.