வழுக்கு மரத்தில் ஏறிய பக்தர்கள்!
ADDED :3986 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோயில் விழாவில் பக்தர்கள் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பாலகிருஷ்ணாபுரம் முத்தாலம்மன் கோயில் விழா நவ.,6 ல் துவங்கியது. அன்று அம்மன் பூஞ்சோலையில் இருந்து கோயிலுக்கு வந்தது. நேற்று முன்தினம் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பக்தர்கள் வழுக்கு மரம் ஏறினர். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இன்று அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.