உடையவர் ராமானுஜருக்கு குங்குமப்பூ சாற்றுமுறை!
ADDED :4099 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் கோவிலில், மூலவருக்கு, குங்குமப்பூ சாற்றுமுறையும், சிறப்பு வழிபாடும் நேற்று நடந்தது. காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில், ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர், உடையவர் ராமானுஜருக்கு, ஐப் பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், பசும்பாலில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம், கலந்து பூசி வழிபடுவது வழக்கம். இதேபோல், இந்த ஆண்டு, நேற்று, இந்த குங்குமப்பூ சாற்று முறை நடந்தது. மூலவருக்கு புது வஸ்திரம் அணிந்து சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.