முருகன் மார்பில் விஷ்ணு சக்கரம்!
ADDED :4352 days ago
திருத்தணி முருகன் மார்பில் சக்கர வடிவில் குழி ஒன்று காணப்படுகிறது. தாரகாசுரனுடன் போரிட்ட போது அவன் ஏவிய சக்கரத்தை முருகன் தன் மார்பில் பதக்கமாகத் தாங்கி, அதன் பிறகு தன் மாமனாகிய திருமாலிடம் தந்தார். விஷ்ணு சக்கரம் பதக்கமாய் இருந்ததன் அடையாளமே முருகனின் மார்பில் குழியாகக் காணப்படுகிறது.