ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரீஷம் 1,2) பதவி உயர்வு!
திட்டமிட்டுப் பணியாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!
குரு டிச. 3ல் 3-ம் இடத்தில் இருந்து 4 க்கு செல்கிறார். இது சிறப்பான நிலை இல்லை என்றாலும், மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும். கேது, சனி இருவராலும் நற்பலன் அதிகரிக்கும். மாதத் தொடக்கத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் மனம் போல இனிதே நடக்கும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு மகிழ்ச்சி தரும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல வருமானம் காணலாம். அதிர்ஷ்டவசமாக திடீர் லாபத்திற்கும் வாய்ப்புண்டு. எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்வீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைப்பயன் கிடைக்கும். சகபணியாளர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் பிரச்னை உருவாகலாம். ஒதுங்கி இருக்கவும். டிச. 7க்கு பிறகு எதிர்பார்த்த ஒப்பந்தம் வந்து சேரும். அரசிய ல்வாதிகள் சுமாரான பலனையே பெறுவர். மக்கள் நலனில் அக்கறை கொள்வது நல்லது.
மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று சாதனை படைப்பர். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தட்டிபோகும். வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழ் நிலை ஏற்படும். பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.விருந்து விழா என சென்று வருவீர்கள். சுக்கிரன் டிசம்பர் 7க்குப் பிறகு சாதகமாக இருப்பதால் வாய்ப்பு வசதிபெருகும். அண்டை வீட்டார் ஆதரவுடன் இருப்பர்.
நல்ல நாள்: நவ. 20, 21, 22, 23, 24, 29, 30, டிச.1, 2, 5, 9, 7, 10, 11
கவன நாள்: நவ. 25, 26 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: சிவப்பு, கருப்பு
வழிபாடு: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். வெள்ளியன்று லட்சுமி தாயாரை வழிபடுங்கள்.