அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உண்டியல் திறப்பு!
ADDED :3999 days ago
திருப்புவனம் : மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி பரமக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோசாலி சுமதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் ராஜாங்கம், உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், செல்லம், சுரேஷ், சுதா உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 415, 89.200 கிராம் தங்கம், 106.600 கிராம் வெள்ளி பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்தன.