மேல்மலையனூர் கோவில் உண்டியல் எண்ணும் பணி!
ADDED :4099 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 16 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், வேதா முன்னிலையில் நடந்தன. இதில் -16 லட்சத்து 71 ஆயிரத்து 658 ரூபாய் ரொக்கமும், 135 கிராம் தங்க நகையும், 125 கிராம் வெள்ளி நகையையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அறங்காவலர் தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன், மணி மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.