வரசித்தி சுயம்பு விநாயகர்: உண்டியல் காணிக்கை ரூ.53 லட்சம்
ADDED :4000 days ago
நகரி: வரசித்தி சுயம்பு விநாயகர் கோவிலில், கடந்த 20 நாட்களில், உண்டியலில் 53.87 லட்சம் ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், வரசித்தி சுயம்பு விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, ரொக்கம், நகை, வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த 20 நாட்களில், பக்தர்கள் அளித்த காணிக்கையை, கோவில் நிர்வாக அதிகாரி பூர்ணசந்திர ராவ் முன்னிலையில், ஊழியர்கள் உண்டியல்களை திறந்து எண்ணினர். இதில், 53,87,890 ரூபாய் ரொக்கம், 107 கிராம் தங்கம், 575 கிராம் வெள்ளி, 193 அமெரிக்க டாலர், 20 கனடா டாலர் மற்றும் 20 மலேசியா ரேன்ஸ் ஆகியவை இருந்தன.