பகவதியம்மன் கோயில் விழா
ADDED :4000 days ago
நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டி பகவதியம்மன் மற்றும் அணைப்பட்டி ஊர்க்காவலன் காளி பகவதியம்மன் கோயில் விழாக்கள் நடந்தது. வைகை ஆற்றிலிருந்து கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இரண்டாவது நாள் அம்மனுக்கு மாவிளக்கு, கிடாவெட்டு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. மூன்றாம் நாள் கரகம் பூஞ்சோலை புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை யூனியன் துணைசேர்மன் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி செய்திருந்தனர்.