உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பாத்தி தேர்த்திருவிழா கோலாகல துவக்கம்!

கல்பாத்தி தேர்த்திருவிழா கோலாகல துவக்கம்!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_36975_110051588.jpgகல்பாத்தி தேர்த்திருவிழா கோலாகல துவக்கம்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_36975_110138201.jpgகல்பாத்தி தேர்த்திருவிழா கோலாகல துவக்கம்!பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே கல்பாத்தியில், பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா நேற்று துவங்கியது.  இதையொட்டி, சுவாமிக்கும், அம்பாளுக்கும், நடந்த திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசித்து அருள்பெற்றனர். தொடர்ந்து, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், சுப்பிரமணியர், கணபதி ஆகிய சுவாமிகள், தேருக்கு எழுந்தருளினர். பெண்கள் உட்பட  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தேர் வடம் பிடித்தனர். கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர்கள் பவனி வந்தன. விழாவில், இரண்டாம் நாளான  இன்று மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் திருத்தேரோட்டமும், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேரோட்டமும் துவங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !