உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு பூஜை!

தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு பூஜை!

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.  பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சணம், தேன், பழச்சாறால் அபிஷேகம் செய்யப்பட்டது. மஹாரண்யம் முரளிதர  சுவாமியின் சீடர் கிருஷ்ண சைதன்யதாஸ்சின் ஹரேராம நாம சங்கீர்த்தனம், கூட்டு பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவு நடந்தது.  மதுரை, தேனி, கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் திருமஞ்சண பொடி பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !