உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சீசன்: வேட்டி, மாலை விற்பனை ‘ஜோர்’!

சபரிமலை சீசன்: வேட்டி, மாலை விற்பனை ‘ஜோர்’!

திருப்பூர் : சபரிமலை சீசன் துவங்கியதையடுத்து, பக்தர்கள் மாலை அணிவிக்க தேவை யான வேட்டி, துளசி மாலை ரகங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல, ஆண்டுதோறும் கார்த்திகை முதல்நாளில், பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்குவர். நடப்பாண்டு, கார்த்திகை மாதம் இன்று பிறக்கிறது. இதையொட்டி, இன்று காலை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், கொங்கணகிரி முருகன் கோவில், ஐயப்பன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்குவர்.சீசன் துவங்கியதை அடுத்து, பக்தர்கள் அணியும் துளசி மாலை, வேட்டி ரகங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. நேற்று, பல கடைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வேட்டி, துண்டு ரகங்கள் ஈரோடு, கரூரில் இருந்து தருவிக்கப்பட்டு, விற்கப்படுகின்றன. பெங்களூரு, சென்னை, ஓசூரில் இருந்து மாலைகள் வரவழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை போன்றவற்றை காரணம் காட்டி, சுவாமி டாலர் மற்றும் வேட்டிகளின் விலை, சீசனின்போது உயர்த்தப்படும். தற்போது, பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.கடந்தாண்டு 120 ரூபாயாக இருந்த சாதாரண வேட்டி ரகம், 130 ரூபாய்; 140 ரூபாயாக இருந்த வேட்டி ரகம், 155-160 ரூபாய்; பார்டர் வேட்டி 180ல் இருந்து 210 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. துளசி, சந்தனம், ஸ்படிகம், ருத்ராட்ச மாலை ரகங்கள், 30 முதல் அதிகபட்சம் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !