சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோம வார வழிபாடு!
ADDED :4139 days ago
சிதம்பரம்: சிதம்பரத்தில் கார்த்திகை மாதம் முதல் சோம வாரம் திங்கட்கிழமையையொட்டி, ஏராளமான பெண்கள் நடராஜர் சன்னதியை 108 முறை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிவனுக்கு உகந்த நாளான கார்த்திகை மாதம் சோம வாரத்தையொட்டி நேற்று காலை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பெண்கள் நடராஜர் சன்னதியை 108 முறை வலம் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.