உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகநாதஸ்வாமி கோவிலில் ராகுபகவானுக்கு அபிஷேகம்!

நாகநாதஸ்வாமி கோவிலில் ராகுபகவானுக்கு அபிஷேகம்!

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில், ராகுபகவானுக்கு குடம் குடமாக பால் அபிஷேகம் நடந்தது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாத ஸ்வாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டுள்ள ராகுபகவானுக்கு, ராகுகாலத்தில் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வந்ததால், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது, மழை குறைந்து வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளதால், பக்தர்கள் கூட்டம் கோவிலில் நிரம்பி வழிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !