உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூர் தாயாருக்கு தங்க கமலபீடம்!

திருச்சானூர் தாயாருக்கு தங்க கமலபீடம்!

திருப்பதி: திருச்சானனூர் பத்மாவதி தாயாருக்கு, நேற்று, தங்க கமலபீடம் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீசிட்டி நிர்வாக இயக்குனர் ரவிசேனா ரெட்டி, தன் நண்பர் பாலாஜி ராமமூர்த்தியுடன் இணைந்து, 32.20 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு தங்க கமலபீடத்தை நன்கொடையாக வழங்கினர். இதை உருவாக்க, ஒரு கிலோ தங்கம் மற்றும் 40 கிலோ செப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு பெற்றுக் கொண்டார். தாயாருக்கு தங்க பல்லக்கு உற்சவத்தின் போது, இந்த தங்க கமலபீடம் பயன்படுத்தப்படும் என்று, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !