கள்ளக்குறிச்சி கோவில்களில் ஐய்யப்பனுக்கு சிறப்பு பூஜை!
ADDED :3989 days ago
கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி கோவில்களில் ஐய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்ஷ்வரர், முடியனூர் அபித குஜாம்பாள் உடனுறை அருணாச்சலேஸ்வரர் கோவில்களிலும் கார்த்திகை சோம வார சிறப்பு பூஜைகள் நடந்தன. கள்ளக்குறிச்சி சிவன் கோவில், காமாட்சி அம்மன், புத்துமாரியம்மன், கெங்கையம்மன், சக்தி விநாயகர், துர்க்கை அம்மன் கோவில்களிலும், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மாயம்பாடி அய்யப்பன் கோவிலிலும் அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்காக மாலை அணிந்தனர்.