சரணகோஷத்துடன் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்!
ADDED :3989 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வராகநதி படித்துறையில் பக்தர்கள் "சரணகோஷத்துடன் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். பெரியகுளம் தாலுகா பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கார்த்திகை முதல் நாளான நேற்று பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதியில் நீராடி, படித்துறை அருகேயுள்ள விநாயகர் கோயில் முன் ஐயப்ப பக்தர்கள் காவி ஆடைகளை உடுத்தி சரண கோஷமிட்டு மாலை அணிந்து கொண்டனர். இவர்களுக்கு ஐயப்ப குருசாமி ஜோதிசாமி மாலை அணிவித்தார். இந்தாண்டு நூற்றுக்கணக்கானோர் முதன் முறையாக சபரிமலைக்கு செல்லும் "கன்னிச்சாமிகள் அதிகளவில் மாலை அணிந்து கொண்டனர். கடந்த ஆண்டை விட மாலை அணிந்து கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. என குருசாமி ஜோதிசாமி தெரிவித்தார்.