பழநி மலைக்கோயில் படிப்பாதை மூடல்!
பழநி: பழநி மலைக்கோயில் படிப்பாதை மராமத்து பணிகளுக்காக தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. பழநிகோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப் பாதை, யானைப்பாதை வழியாக மலைக்குசெல்கின்றனர். யானைப்பாதையில் மண்டபங்கள், சேதமடைந்த தடுப்புகள் புதுப்பிக்கும் மராமத்துபணிநடக்கிறது.
இதைப்போலவே படிப்பாதையில் சேதமடைந்திருந்த படிகற்கள், விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் மராமத்து பணிகள் நடக்கிறது. இதன்காரணமாக படிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலைசீசன் முன்னிட்டு இனிவரும் நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், மராமத்துபணியை விரைந்து முடிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கோயில்நிர்வாகத்தினர் கூறுகையில், ‘விரைவில் தைப்பூசவிழாவிற்காக படிப்பாதை, யானைப்பாதையில் சேதமடைந்த பகுதிகளில் மராமத்துபணிகள் நடக்கிறது. வேலைநடக்கின்ற இடத்திலிருந்து மாற்றுவழியாக அதாவது யானைபாதைவழியாக செல்ல பக்தர்களை அறிவுறுத்தப்படுகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தால் படிப்பாதை, யானைப்பாதை இருவழிகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். மலைக்கோயில் இடும்பர்கோயில் அருகே பக்தர்கள் வசதிக்காக முதல் உதவி சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. அனைத்து பணியும் ஒருவாரகாலத்தில் முடிக்கப்படும்,’ என்றனர்.