மதுரை மீனாட்சி அம்மனுக்கு வாடகை பாக்கி ரூ. ஒரு கோடி!
ADDED :3987 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருவாய் இனங்களில் வாடகை ரூ.ஒரு கோடி வசூலாகாமல் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கடை நடத்துவோர், தரை வாடகை செலுத்துவோர் பலர் மாத வாடகையை செலுத்தாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பு செய்தனர். ரூ.ஒரு கோடி அளவுக்கு வசூலாகாமல் இருந்தது. இவர்களின் பட்டியலை கோயில் இணை கமிஷனர் நடராஜன் வெளியிட்டுள்ளார். அத்துடன் பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை கோயில் முன் அறிவிப்பு பலகையாக வைத்தார். இதையடுத்து பாக்கி வைத்திருப்பவர்கள் சிலர் ரூ.4 லட்சம் வரை செலுத்தி ரசீது பெற்று சென்றனர். இணை கமிஷனர் நடராஜன் கூறுகையில், ”வாடகை பாக்கியை தொடர்ந்து வசூலாகி வருகிறது. நிலுவை பாக்கியை செலுத்துவோரின் பெயர்கள், பாக்கி செலுத்தாதோர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்,” என்றார்.