உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோஷம் நீக்கும் ருத்ரகோடீஸ்வரர் கோவிலின் அவலம்!

தோஷம் நீக்கும் ருத்ரகோடீஸ்வரர் கோவிலின் அவலம்!

திருவாரூர்: திருவாரூரில் பிராமணர் தோஷம் நீக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோவில் சிதிலமடைந்து, கோவில் முழுவதும் மரம் கொடிகள்  படர்ந்து சேதமடைந்து வருகிறது. முன்னொரு காலத்தில்  கபிலர் என்ற அந்தண ரிஷி தன் தந்தைக்கு காசி க்கு சென்று கர்மா(இறுதி சடங்கு) செய் யமுடியாமல், ஓடம் போக்கி ஆற்றின் அருகில் அமர்ந்து  ஈசனை(பரமேஸ்வரனை) வணங்கி தவம் செய்தார். அப்போது  ஈசன் கபிலருக்கு தெருக்÷ காடியில் இருந்து கோரத்தாண்டவம் ஆடி வந்து  ரிஷபாரூடராக காட்சிக் கொடுத்து, காசியை விட இங்கு புண்ணியம் அதிகம் என ஆசீர் வசித்து   சுடுகாட்டில் இருந்து அதாவது கபிலர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலை விற்கு மீண்டும் கோரத்தாண்டவம்  ஆடிச்சென்று  மறைந்தார்.

இதனால் தந்தைக்கு கர்மா செய்த நேரில் காட்சிக் கொடுத்த ஈசனை அவர் மறைந்த இடத்தில் வழிபட்டு வந்தார்.  பின்னாளில், ருத்ர தாண்டவ தெரு க்கோடி ஈஸ்வரன் என அழைக்கப்பட்டார். பின்னாளில் ருத்ர கோடீஸ்வரராக அருள்பாலித்தார். அந்தனர்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இறந் தாலும்  அங்கு எரிக்கப் பட்ட சாம்பலுடன் (காசிக்கு செல்லாதவர்கள்)  திரு வாரூர் வந்து இந்த ருத்ர பூமியில் வைத்து வணங்கியபின், ஓடம் போக் கி  ஆற்றில் கரைத்து இறைவனை தரிசித்து வந்தனர். தற்போது கடலில் கலக்கும் இந்த ஓடம் போக்கி ஆற்றிற்கு (கபிலர் நதி) என்று அழைக்கப்படுகிறது.  இந்த சுடுகாட்டில் எரியூட்டப்படும் அந்த னர்களின் உடல் மணத்தை ஈசன் சாம்பிராணி மணமாக சுவாசிப்பதாக கூறப்படுகிறது.இதனால் இந்த  சுடலைக்கு பிராமண சமூக ருத்ர பூமி  என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இத்தகயை சிறப்பு பெற்றதால் சோழர்காலத்தில் இங்கு கோவில் கட்டி  ÷ காடீஸ்வரர் ஆலயமாக அறிவித்து வழி பட்டனர். இக்கோவில் அந்த ணர்களின் தோஷம் நீக்கும் சிவத்தலாமாக உள்ளதால் இந்தியாவில் பல்வேறு  பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து சென்றனர். மேலும் வெளி மாநிலத்தில் இருந்து கோவிலுக்கு  கர்மா செய்ய வரும் அந்தனர்கள் மற்றும்  பக்தர்களின் புசி தீர்க்க நஞ்சை மற்றும் புஞ்சை என 20 ஏக்கருக்கும் மேல் நிலங்களை மன்னர் காலத்தில் கோவிலுக்கா சாசனம் எழுதி வைத்தனர்.  நாள்பட்ட நோய் வயப்பட்டவர்கள், விவாகம் மற்றும்  புத்திர பாக்கி யத்திற்கும் கோவிலின் தெற்கு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர்  எடுத்துச் சென்று பூஜித்து வெற்றி அடைந்துள்ளதுடன், பிற சமூகத்தினர்கள், தங்கள் முன்னோர்களுக்கு கர்மாசெய்ய கிணற்று தண் ணீர் வைத்து  படையல் செய்துள்ளனர்.

120 நீளம், 100 அடி அகலத்தில் கட்டப்பட்ட கோவில் சுற்று மதிற் சுவ ர்கள், கோவில் உள்ளே உள்ள பிற சந்நிதிகள்,  மூன்று நிலை கோபுரமும்  இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. தற்போது கோவிலில் செடி, கொடிகள் படர்ந்து, புட்புதற்கள் மண்டியும் கோவிலுக்குள் செல் ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. கோவில் நுழைவு வாயிலில் பலிபீடம் நந்தியும், மேற்கு பக்கம் பார்த்த வகையில் உள்ளது. கிழக்குப் பக்கம் பார்த்த வகையில் ÷ காடீஸ்வரரும், தெற்கு பக்கம் பார்த்து சவுந்தர நாயகி அம்பாளும் அருள் பாலிக்கின்றனர். மேலும் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன்,  தெட்சிணா மூர்த்தி,காளபைரவர் உள்ளிட்ட பிற தெய்வங்களும் தனித்தனி சந்நி தியில் அருள்பாலித்தனர். இக்கோவிலில் பல முனிவர்களும்,ரிஷி  மார்களும் பல்வேறு யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்து இறைவனி டம் அருள் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. கோவிலை புரணமைப்பதாக கடந்த  சில ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்தனர். ஆனால் இது நாள் வரை அதற்கான முயற்சிகள் யாரும் மேற்கொள்ளவில்லை.

ஊருக்கும் நடுவில் உள்ள சுடுகாட்டை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் மாற்று கருத்துக் கொண்டர்கள் பல்வேறு போராட்டங்கள்  நடத்தி கோர்ட் வரை சென்று தோல்வி அடைந்துள்னர்.  எனவே, வளர்ந்து வரும் கம்யூட்டர் (அறிவியல்) காலத்தில் சிதிலமடைந்த கோவிலை புது ப்பித்து செயல்படுத்திட விருப்பம் உள்ளவர்கள் கோவில் பராமரிப்பு செய்து வரும் ஐயப்பன் என்பரை 9842418504 என்ற எண்ணில் தொடர்பு  கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !