உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழா: மாட வீதி சீரமைக்கும் பணி!

திருவண்ணாமலை தீப திருவிழா: மாட வீதி சீரமைக்கும் பணி!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 2ம் தேதி மகா தேரோட்டமும், 5ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்படும்.தீப திருவிழாவை முன்னிட்டு, மாட வீதிகளான தேரடி தெரு, மேற்கு கோபுர தெரு, பெரிய தெரு, சின்னகடை தெரு, உள்ளிட்ட தெருக்கள் சீரமைக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. குண்டும் குழியுமான உள்ள இடத்தை சீரமைக்கும் பணியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். ராஜகோபுரம் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியிலும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பின், பந்தல்போடும் பணி துவங்க உள்ளது. பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் தீப திருவிழாவின்போது போதிய வசதிகள் கிடைக்க நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைதுறை, வருவாய்த்துறையினர், போலீஸார் மற்றும் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !