கன்னி பூஜைக்குரிய நாள்!
ADDED :3983 days ago
சபரிமலையாத்திரை முதன்முதலாகச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னிபூஜை. இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்றும் கூறுவர். மண்டல காலமாகிய, கார்த்திகை முதல்நாளில் இருந்து, மார்கழி பதினொன்றாம் தேதிக்குள், வீட்டில் இச்சடங்கை நடத்துவதற்கு நாள் குறித்து விட வேண்டும். பந்தலிட்டு, அதன் நடுப்பகுதியில் மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தின் நடுவில் ஐயப்பன் படம் வைத்து, சுற்றிலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசுவாமி, கடுத்தை சுவாமி, வாபர், ஆழி ஆகியவற்றிற்கு உரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும் அவல், பொரி, பழம், வெற்றிலை, பாக்கு, சித்ரான்னம் படைத்து பூஜை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.