திருச்சானூரில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :4083 days ago
திருப்பதி: திருச்சானூரில், நேற்று, வருடாந்திர பிரம் மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் நடைபெறும், ஒன்பது நாள் வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று, துவங்கியது.
இதற்காக, கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. தாயாரின் வாகனமான யானையின் உருவக்கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. தாயார், சின்னசேஷ வாகனத்தில் வலம் வந்தார். பிரம்மோற்சவம் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருச்சானூரில் உள்ள நந்தவனத்தில், தேவஸ்தானம் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பல அரிய வகை மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.