பிரசன்ன விநாயகர் கோவிலில் வலம்புரி சங்காபிேஷக விழா!
ADDED :3982 days ago
உடுமலை : கார்த்திகை மாதத்தையொட்டி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், வலம்புரி சங்காபிேஷக விழா நடந்தது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், அனைத்து சிவாலயங்களிலும் ஒவ்வொரு சோமவார கிழமைகளில் 108 அல்லது 10௦8 சங்குகளுக்கு வாசனை பொருட்களை கலந்த நீரினால் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதன்படி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்காபிேஷக விழா நடந்தது. காலை 9.30 மணிக்கு விநாயகர் பூஜை, கலசம் பூஜை மற்றும் சங்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 11.00 மணிக்கு 108 வலம்புரி சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.