உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கினர்!

பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கினர்!

பொள்ளாச்சி: கார்த்திகை மாதம் பிறந்து விட்டதை அடுத்து, சபரிமலைக்கு செல்ல பொள்ளாச்சி பகுதி பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க  துவங்கியுள்ளனர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கும் கண்கண்ட தெய்வமாக சபரிமலை ஐயப்பன் கருதப்படுகிறார். ஐயப்பனை  சபரிமலை சென்று தரிசிக்க, ஒரு மண்டலம் எனப்படும் 48 நாள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்வர். இதற்காக மாலை அணிந்து, கருப்பு மற்றும் நீல  நிற ஆடைகளை அணிந்து கட்டுப்பாடான விரதத்தை மேற்கொள்ளுவது வழக்கம். அடுத்த மாதம் சபரிமலைக்கு செல்ல வேண்டி, கார்த்திகை முதல்  தேதி முதல் பக்தர்கள் மாலை அணியதுவங்கியுள்ளனர். இதற்காக பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம்  அலைமோதி வருகிறது. சிறார்கள் முதல் முதியவர்கள் முதல் குடும்பத்துடன் வந்து, பயபக்தியுடன் மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்துள்ளனர்.  அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்கு இதுதொடரும் என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !