உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப் பெருமாள் கோவிலில் முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி!

வீரராகவப் பெருமாள் கோவிலில் முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி!

திருப்பூர்: திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஊர்வலத்துக்காக, முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், டிச., 1ல் நடக்கிறது. வரும் 28ம் தேதி, யாக சாலை பூஜை துவங்குகிறது. அதற்கு  முன்,  பக்தர்கள் பங்கேற் கும் முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்காக, முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி, கோவில்  வளாகத்தில் நேற்று நடந்தது; 300க்கும் மேற்பட்ட மண் சட்டிகளில்,  மண் மற்றும் நவ தானியங்களை பெண்கள் இட்டனர். இவை, வரும் 27ம் தேதி  நடைபெறும் ஊர்வலத்தின்போது எடுத்து வரப்படும். முளைப்பாலிகை மற்றும் தீர்த்த கலச ஊர்வலத்தில் பங்கேற்க விரும்பும் பெண்கள், அனுமதி  சீட்டை கோவிலில் பெற்றுக் கொள்ளலாம், என, திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !