உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலையர் கோயில் ராஜகோபுர புதுப்பிக்கும் பணி தொடக்கம்!

சுசீந்திரம் தாணுமாலையர் கோயில் ராஜகோபுர புதுப்பிக்கும் பணி தொடக்கம்!

நாகர்கோயில்: சுசீந்திரம் தாணுமாலையர் கோவில் ஓர் உயர்ந்த ஏழு நிலைக் கோபுரத்தை முகப்பில் கொண்டது. இதனை நாஞ்சில் நாட்டின் பல  பகுதிகளில் நின்றும் காணலாம். கோபுர உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதிகளையும் கன்னியாகுமரிக் கடற்கரையினையும்  கண்குளிரக் காணலாம்.  இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார்.

நான்கு இன்னிசைத் தூண்களும் பிறவிடத்தில் காண முடியாத  கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இங்குள்ள அனுமன் சிலை மிகவும்  அழகானது. பிரம்மாண்டமானது. இதன் உயரம் 18 அடியாகும். அற்புதமான சிற்பமாக அமைந்திருக்கும். இந்த அனுமன் இத்தலத்தில் மிகவும் விசேஷம். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் உள்ள பழங்கால சிற்பங்களையும், கோபுரத்தின் உள்ளே உள்ள பழங்கால பச்சிலை ஓவியங்களையும் பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு 1.10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்காக சாரம் கட்டும் பணி முடிந்து, சிற்பங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !