கொற்றலை கரையில்.. அய்யப்ப சுவாமி உற்சவம்!
ADDED :3999 days ago
பள்ளிப்பட்டு: கார்த்திகையில் மாலையிட்ட அய்யப்ப பக்தர்கள், நேற்று முன்தினம், தீ மிதித்து, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடத்தினர். பள்ளிப்பட்டு, ராதா நகர், அய்யப்ப சுவாமி கோவிலில், கடந்த 17ம் தேதி (கார்த்திகை 1ம் தேதி), 300 அய்யப்ப பக்தர்கள் மாலையிட்டு, விரதம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம், சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலையில் உற்சவமும் நடந்தன.காலை 10:00 மணிக்கு, அய்யப்ப சுவாமிக்கு, நெய் அபிஷேகமும், சந்தன அபிஷேகமும் நடந்தன. மாலை 6:00 மணிக்கு, கொற்றலை கரையில் இருந்து, சுவாமியை அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.ஊர்வலத்தின் போது, பக்தர்கள் விளக்கு தீபம் ஏந்தி வந்தனர். 8:00 மணியளவில், கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடந்தது.நள்ளிரவு 12:00 மணியளவில், ஜோதி தரிசனம் மற்றும் மகா ஆரத்தி நடந்தன. இதில், திரளான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.