கேட்பாரற்ற அம்மன் சிலை: போலீசார் விசாரணை!
ADDED :3998 days ago
முதுநகர்: கடலுார் துறைமுகம் அருகே, கிடந்த அம்மன் சிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் துறைமுகம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிங்காரத்தோப்பு பாலத்தின் கீழ் பகுதியில், 25 கிலோ எடையுள்ள ஒன்றே முக்கால் அடி உயர, அம்மன் சிலை கேட்பாரற்று கிடந்தது. அதை கைப்பற்றி, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த சிலை எப்படி அங்கு வந்தது என்பது குறித்து, துறைமுகம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.